TNPSC டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன், குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

குரூப் 2 ஏ-வில் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். அறிவிப்பாணை வெளியான பிறகும்கூட இந்த காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் -2 கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளின் கீழ் தேர்வு செய்யப்படுகின்றனர்.

சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளைநிலை வேலைவாய்ப்பு அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் போன்ற பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஏற்க பணியமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடதக்கது.

How to Apply for TNPSC Group 2 Exam: 

How to apply in online: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான http://www.tnpsc.gov.in/  http://www.tnpscexams.net/ http://www.tnpscexams.in இணையதளங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

டிஎன்பிஎஸ்சி அமைப்பு நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் எனப்படும் ஒருமுறைப்பதிவு கட்டாயமாகும். தேர்விற்கு விண்ணப்பிக்கும்முன், இதில்பதிவு செய்வது அவசியம். இதனை, வேலைவாய்ப்புக்கான விண்ணப்பமாக கருதமுடியாது.

ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் செய்வது எப்படி?

1. டிஎன்பிஎஸ்சி login id மற்றும் Password-ஐ உருவாக்கவும்

2. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் படிவத்தை பூர்த்தி செய்யவும்

3. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசனுக்கான கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்

4 பின் ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோ, கையெழுத்து பிரதியை பதிவேற்றவும்

5. பின் submit பட்டனை அழுத்தவும்

6. பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்ட ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன், பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.