சிறந்த விவசாயிகளுக்கு பரிசு:தமிழக அரசு அறிவிப்பு

இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு இனி பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேளாண் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு Rs. 2 லட்சம் பரிசு வழங்கப்பட உள்ளது. இதே போன்று, இயற்கை வேளாண்மை, வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மொத்தமாக Rs. 2 லட்சம் அளிக்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் நுழைவுக் கட்டணமாக Rs. 100 செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய ரசீதுடன் விண்ணப்பப் படிவத்தை இணைத்து அளிக்க வேண்டும்.
தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டு பின்னர் மாநிலக் குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும். அதன்பின்பு விண்ணப்பங்கள் மாநிலக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும், புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்புக்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா Rs. 1  லட்சம் வீதம் பரிசு அளிக்கும்.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக Rs. 1 லட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே Rs. 60 ஆயிரம், Rs. 40 ஆயிரம் வழங்கப்படும். வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக Rs. 2 லட்சம் அளிக்கப்பட உள்ளது.